மாலை மணி ஐந்து நாற்பத்திரண்டு, நாயகன், லேப்டாபினை இழுத்து மூடுகிறான், உள்ளங்கையினை அசைத்துக்காட்டி முன்னமர்ந்திருக்கும் மேலாளரிடமும், வேலையிலும் சிலவேளையிலும் இடவலபக்கமிருக்கும் பக்கபலமான முன்னோரிடமும் விடைபெற்றான், நாட்டில் ஒரு விரல் உரிமை நிலைநாட்ட. வெகு நாள் கழித்து என்பதால் களிப்புடன் வேகநடைபோட வழியில் வழக்கமாய் கானும் பச்சையினை பார்க்க மறக்கவில்லை, ஆனால் இன்றோ பச்சை தடைசெய்யப்பட்ட மிட்டாய் நிற வண்ணம் உடன் உச்சியில் உடன் பறித்து கோர்த்த வென் முள்ளையுடன். மின்தூக்கி இறக்கிவிட முன்பேசியபடி நாயகன் நண்பனிடம் மிதிவண்டி பெற்று விரைந்தான் தங்கியிருக்கும் நல்லூருக்கு. மணி ஆறு இருபது, தக்கல் கிடைத்த ரயில் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரங்கள். நாயகன் வழியில், பாமா கல்லூரி முன்புற சாலையின் மேடுபல்ல random vibration ல் வழிப்போக்கர் தவறவிட்ட சம்படப்பையினை சாலையின் ஓரம் நல்ல மனிதரின் உதவியுடன் எடுத்துவைத்தக்கையுடன் உடன் வரப்போகும் அன்பரை அழைத்து தாமதம் தெரிவித்து கிளம்பக் கோருகிறார், அன்பர் மறுத்து காத்திருக்கலானார். மணி ஆறு ஐம்பது, டிக் டிக் இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். அன்னையிடம் பேசிக்கொ...
கருத்துகள்
கருத்துரையிடுக