யார் கதாநாயகர்?

மாலை மணி ஐந்து நாற்பத்திரண்டு, நாயகன், லேப்டாபினை இழுத்து மூடுகிறான், உள்ளங்கையினை அசைத்துக்காட்டி முன்னமர்ந்திருக்கும் மேலாளரிடமும், வேலையிலும் சிலவேளையிலும் இடவலபக்கமிருக்கும் பக்கபலமான முன்னோரிடமும் விடைபெற்றான், நாட்டில் ஒரு விரல் உரிமை நிலைநாட்ட. வெகு நாள் கழித்து என்பதால் களிப்புடன் வேகநடைபோட வழியில் வழக்கமாய் கானும் பச்சையினை பார்க்க மறக்கவில்லை, ஆனால் இன்றோ பச்சை தடைசெய்யப்பட்ட மிட்டாய் நிற வண்ணம் உடன் உச்சியில் உடன் பறித்து கோர்த்த வென் முள்ளையுடன். மின்தூக்கி இறக்கிவிட முன்பேசியபடி நாயகன் நண்பனிடம் மிதிவண்டி பெற்று விரைந்தான் தங்கியிருக்கும் நல்லூருக்கு. மணி ஆறு இருபது, தக்கல் கிடைத்த ரயில் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரங்கள். நாயகன் வழியில், பாமா கல்லூரி முன்புற சாலையின் மேடுபல்ல random vibration ல் வழிப்போக்கர் தவறவிட்ட சம்படப்பையினை சாலையின் ஓரம் நல்ல மனிதரின் உதவியுடன் எடுத்துவைத்தக்கையுடன் உடன் வரப்போகும் அன்பரை அழைத்து தாமதம் தெரிவித்து கிளம்பக் கோருகிறார், அன்பர் மறுத்து காத்திருக்கலானார். மணி ஆறு ஐம்பது, டிக் டிக் இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். அன்னையிடம் பேசிக்கொண்டும் மாமன் மகன் வாங்கி வைத்த பிஸ்கட்டினை மெண்ணுக்கொண்டும் தேவையினை பையில் நிறப்பிக்கொண்டான், ஆயிஷா நடராசனின் புத்தகங்களை மறக்கவில்லை. வாசலில், வாட்டிய வெயிலில் காய்ந்த துணி மற்றும் வாடிய கீரையை மடித்து மற்றும் தண்ணீர் ஊற்றி தலைநிமிரச் செய்து விட்டு, திண்டுக்கல் இல்லை இருந்த சீன பூட்டினை பூட்டி புறப்பட்டான். மணி ஏழு பத்து, புகழ்பெற்ற தொண்ணுறைந்து (கிழக்கு ரயில்நிலையம் செல்லும் பேருந்து) செல்லும் காட்சியின் மறைபுலத்தில் காத்திருந்த அன்பரை கண்டறிந்தான் நாயகன். இருவரும் அடுத்து வந்த தொண்ணூற்றொன்பதில் ஏறிக்கொண்டுனர், நல்லூரில் கிளம்பும் பேருந்து என்பதால் அமர்ந்தனர், ஒருவேலை வான்மியூர்ஆற்று பேருந்தென்றால் இருவரும் நடராசர் தான் இறங்கும் வரை. மணி ஏழு நாற்பது, இன்னும் நாற்பதே நிமிடங்கள், வாக்கம் மேடினை தாண்டவில்லை, மிகுந்த போக்குவரத்து நெரிசல். நாயகனுக்கு ஆதித நம்பிக்கை பேருந்து சரியான நேரம் சென்றடையும் என்று. அன்பரோ அன்பரின் நண்பர் இருவரை அழைக்கிறார், ஏதோ உரைக்கிறார். மணி ஏழு‌நாற்பத்தைந்து, டிக் டிக் இன்னும் அரைமணி நேரம்தான், போகும் போக்கில் அடைவது அறிது என்பதை உணர்கிறார் அன்பர், வாக்கம் மேட்டில் நாயகரையும் சேர்த்துக்கொண்டு இறங்கலானார், நாயகருக்கோ இன்னும் நம்பிக்கை அறை மனதாய் இறங்கலானார். ஆனால் அப்போது நாயகருக்கு தெரியவில்லை, யார் கதாநாயகரென்று. மணி ஏழு ஐம்பத்தைந்து, அன்பர் அழைத்த அன்பரின் நண்பர்கள் இருவர் ஆளுக்கொருவராக அன்பரையும் நாயகரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு, வாக்கத்தின் மேட்டிலிருந்து கிழக்கு ரயில்நிலைய வாசல் நோக்கி விரைந்தனர், கூகுள் ஆண்டவர் கேட்டதற்கு இன்னும் 24 நிமிட பயணம் என்றார். மணி எட்டு பத்தொன்பது எனக்கைபேசியில் காட்டுகிறது, என்றால் ரயில் கிளம்ப இன்னும் 60 வினாடிகளை விடக் குறைவே. இருவரும் படிக்கட்டுகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர், நாயகருக்கு நம்பிக்கை இல்லை, நடைமேடை அடைந்தனர், அதுவோ காலியான நடைமேடை, ஆம் அது சரியான நடைமேடை தான் ....... ............ "டிங் டிங் பயணிகளின் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20635, ஆனந்தபுரி விரைவு வண்டி இன்னும் சற்று" அன்பர் கதாநாயகரே!!! நண்பர்களுக்கு கோடி நன்றிகள்!!!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் 99 தட்டச்சு பழகுவோம்!