உழவர் சந்தை ஒரு பார்வை

             உழவர் சந்தை ஒரு பார்வை

ஆரம்பிக்கலாம் சிறிய முன்னுரையுடன் :

          14 நவம்பர் 1999ல் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்த வேண்டி முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்டது தான் உழவர் சந்தை.
          
          ஆட்சிகள் மாற்றிய காட்சிகள் தாண்டி இன்று தன்னை தோற்றுவித்த கட்சியின் தனிப்பெரும்பான்மையான ஆட்சி மீண்டும் தேர்வு ஆகியிருக்கிற நிலையில், உழவர் சந்தையின் தற்போதைய நிலையை சற்று பார்போம்.

கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் : 

          குறிப்பிட்ட சந்தையில் சிறு குறு விவசாயிகள் தங்கள், தாம் விளைவிக்கும் காய் கனி மற்றும் விளைநிலப்பரப்பளவு போன்ற விவரங்கள் கொடுத்து உறுப்பினர் அட்டை பெற்று, தினமும் தம் வருகையை பதிவிட்டு, மதியம் வரை வரும் மக்களிடம் விற்பனை செய்யலாம் போன்ற நடைமுறைகளில் எந்தவித பெரிய மாற்றமும் இன்றி வழக்கம் போலவே செயல்பட்டு வருகிறது.

கொரோனா ஒரு நீண்ட புயல்:
 
          மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை கேட்டறிந்த பின்னர், கொரோனா தொற்றால் ஏற்ப்பட்ட பொது முடக்கத்துக்கு பின் வியாபாரம் பற்றி கேட்டதற்கு, புயலுக்கு பின் அமைதியை எதிர்பார்த்து ஏமார்ந்து போனது தான் மிச்சம் என பதில் அளித்தனர்

          குறிப்பாக பொதுமுடக்கத்துக்கு பின் சந்தைக்கு மக்கள் வரவு கணிசமாக குறைந்துள்ளதாக கவலை தெரிவித்தனர்

லாபம் இல்லை:

          மேலும் குடும்பமாக  விவசாயம் செய்து வந்த பல குடும்பங்களின் சந்ததியினர் படித்து வேறு தொழில் செய்ய போய் விட்டதால், கூலிக்கு ஆள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு லாபம் இல்லாமல் போவதாக வருந்தினர், இவ்வாறு பல சிறு குறு விவாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டதாகவும் கூறினர்

          இவ்வாறு நடப்பதற்கு நவீன விவசாய முறைகள், இயற்கை இடுபொருள்கள் அறியாமையும் ஒரு காரணமாகும் என்பது அவர்களின் விவசாய முறைகளை கேட்டறிந்த போது தெரியவந்தது

வேண்டுகோள்:

          விவசாயிகளிடம் தங்களுக்கு குறைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டதற்கு, சிலர் உழவர் சந்தை விவசாயிகளுக்கென்று முந்தைய ஆட்சி காலங்களில் இருந்த இலவச மன்னிக்கவும் கட்டணமில்லா பஸ் போக்குவரத்தை மீண்டும் அமல்படுத்தினால் சிறு குறு விவசாயிகளின் போக்குவரத்து பாரம் சற்று குறையுமென வேண்டுகோள் வைத்தனர்.

குற்றம்:

          எந்த அரசு துறைகளில் தான் குற்றம் நடப்பதில்லை என்ற கேள்விக்கு ஏற்றவாரே, உழவர் சந்தையிலும் கூட குற்றங்கள் நடைபெறகின்றன,                 
 
          நிர்வாகத்தில் இருக்கும் ஆனால் அதை கண்டறியவில்லை, பேச்சுவாக்கில் ஒரு விவசாயி இடைதரகரிடம் கனிகளை வாங்கி உழவர் சந்தையில் விற்பதை உலரிவிட்டார், இன்னும் எத்தனை விவசாயிகள் இவ்வாறு செய்கிறார்கள் ஒருவேளை பலராக இருந்தால்....?

          


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கதாநாயகர்?

தமிழ் 99 தட்டச்சு பழகுவோம்!