உழவர் சந்தை ஒரு பார்வை
உழவர் சந்தை ஒரு பார்வை ஆரம்பிக்கலாம் சிறிய முன்னுரை யுடன் : 14 நவம்பர் 1999ல் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுத்த வேண்டி முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசால் ஆரம்பிக்கப்பட்டது தான் உழவர் சந்தை. ஆட்சிகள் மாற்றிய காட்சிகள் தாண்டி இன்று தன்னை தோற்றுவித்த கட்சியின் தனிப்பெரும்பான்மையான ஆட்சி மீண்டும் தேர்வு ஆகியிருக்கிற நிலையில், உழவர் சந்தையின் தற்போதைய நிலையை சற்று பார்போம். கடைபிடிக்கப்படும் நடைமுறை கள் : குறிப்பிட்ட சந்தையில் சிறு குறு விவசாயிகள் தங்கள், தாம் விளைவிக்கும் காய் கனி மற்றும் விளைநிலப்பரப்பளவு போன்ற விவரங்கள் கொடுத்து உறுப்பினர் அட்டை பெற்று, தினமும் தம் வருகையை பதிவிட்டு, மதியம் வரை வரும் மக்களிடம் விற்பனை செய்யலாம் போன்ற நடைமுறைகளில் எந்தவித பெரிய மாற்றமும் இன்றி வழக்கம் போலவே செயல்பட்டு வருகிறது. கொரோனா ஒரு நீண்ட புய...